ஜெயா பச்சனை தவிர பச்சன் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி
பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அபிஷேக் பச்சனுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் ஐஸ்வர்யாராக்கும் அவர்களது மகள் ஆரத்யா பச்சனுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாலிவுட் ரசிகர்கள் விரைவில் நலம்பெற கோவில்கள் பலவற்றில் சிறப்பு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
