கைக்கூலிகளை வைத்து கல்லெறிவதன் மூலம் எனது அரசியல் பயணத்தினை நிறுத்திவிட முடியாது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரன் சூளுறை(வீடியோ இணைப்பு)
கைக்கூலிகளை கொண்டு கல்லெறிவதன் மூலம் எனது அரசியல் பயணத்தினை நிறுத்தி விட முடியாது என நுவரெலியா மாவட்டத்தின் பொது பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்தார்.
தலவாக்கலையில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடந்து கருத்து தெரிவிக்கையில்.. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நான் சென்ற வாகனத்திற்கு தேயிலை மலையில் ஒழிந்திருந்து சில அரசியல் வாதிகளின் கைக்கூலிகள் கல்லெறிந்தார்கள். இன்று நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மக்கள் இன்று என்னுடன் அணி திரள்வதனால் அவர்கள் அதனை பொருத்துக்கொள்ள முடியாது, கல்லெறிகிறார்கள். இது அரசியல் தீவரவாதம் என்று தான் கூற வேண்டும். இதற்கு நான் பயந்தவன் அல்ல.அவர்களுக்கு தையிரியம் இருந்தால் என்னுடன் நேரடியாக மோதியிருக்க வேண்டும.; அவர்களுக்கு தையிரியம் இல்லாததனாலேயே இவ்வாறு செய்கிறார்கள.; இன்று ஒரு அமைச்சர் நான் பெரிசூட்டில் இருந்து குதித்தவன் என்று பிரசாரம் செய்து வருகிறார்.ஆனால் இலங்கை பிரஜை என்ற வகையில் எந்த இடத்திலும் சென்று வாக்கு கேட்பதற்கு எனக்கு உரிமையுள்ளது.அதே நேரம் நான் மலையகத்தைச் சேர்ந்தவன் அவர்கள் தான் இன்று கொழும்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள.; அவர்களின் பி;ள்ளைகள் கூட கொழும்பில் தான் படிக்கின்றனர.; அவரது ஒரு மகன் அவுஸ்திரேலியாவில் படிக்கிறார்.அதற்கெல்லாம் காரணம் என்ன வென்றால் அவர்கள் சொகசா வாழ்வதற்கு தான் பார்க்கிறார்கள்.இவர்கள் இன்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரசிங்க அவர்களை பற்றி பேசுகிறார்கள்.முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்கவை பற்றி பேசுகிறார்கள். இவ்வாளவு பேசுகின்றவர்கள் அன்று 50 ரூபா கொடுக்காத போது தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில்; இருந்து விலகியிருக்கலாம்.அன்று விலகுவதற்கான தையிரியம் இருக்கவி;ல்லை.அவர்கள் அன்று பார்த்தது அவர்களின் சொகுசானவாழ்க்கையை தவிர மலையக மக்களின் வாழ்க்கையினை பார்க்கவில்லை அப்படி பார்த்திருந்தால் அன்று அவர்கள் விலகியிருப்பார்கள் அவர்கள் அன்று ஒழுங்கான அரசியல் செய்திருந்தால் நான் இங்கு வர வேண்டிய தேவையிருக்காது. ஆகவே நாங்கள் நிச்சயமாக பாராளுமன்றம் செல்வோம் சென்று மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தினை ஏற்படுத்துவோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
