http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மற்றுமொரு ஆலோசகருக்கும் கொரோனா : 70 சிறார்கள் உட்பட 300 பேர் தனிமைப்படுத்தலில்

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய மற்றுமொரு ஆலோசகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அனுராதபுரம், ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் விடுமுறைக்காக வீடு சென்றிருந்த நிலையில் குறித்த கிராமத்தில் இவருடன் தொடர்பை பேணிய 70 சிறுவர்கள் உட்பட 300 கிராமா வாசிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு பயிற்சி வழங்கவென திசாவெவ இராணுவ முகாமில் இருந்து சென்ற இராணுவ அதிகாரியே கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆலோசகரென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *