http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஹைட்ராக்சி குளோரோகுயின் எடுத்துக்கொண்டேன். அது வேலை செய்தது. நான் நன்றாக இருக்கிறேன் – பிரேசில் அதிபர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ, தினமும் ஒரு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து எடுத்துக் கொள்வதாகவும், அது தனக்கு வேலை செய்கிறது என்றும் கூறியுள்ளார்.

65 வயதாகும் அதிபர், தனது கொரோனா அனுபவம் பற்றி பேஸ்புக் மூலம் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது: நான் இதை மிகத் தெளிவாகச் சொல்கிறேன். ஹைட்ராக்சி குளோரோகுயின் எடுத்துக்கொண்டேன். அது வேலை செய்தது. நான் நன்றாக இருக்கிறேன். கடவுளுக்கு நன்றி. இதனை விமர்சிப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு மாற்றை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மலேரியா மற்றும் முடக்குவாதத்திற்கான மருந்தான இது கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமெரிக்கா தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *