இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலமே வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப தலைவருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.(வீடியோ இணைப்பு)
இன்று நாட்டில் பலமான அரசாங்கம் ஒன்று அமையவுள்ளது. அந்த அரசாங்கத்தின் பலமிக்க அமைப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருக்கும். அதில் எமது பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டதால் நாங்கள் நினைத்ததை சாதிக்க முடியும்,அதற்கு நுவரெலியா மாவட்டத்தில் இன்று எட்டு: பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் வேட்பாளர்களை தெரிவு செய்யவதன் மூலம் நாம் மலையக பகுதியில் வாழும் எமது இளைஞர் யுவதிகளின் வேலை இல்லா பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம.; அது மட்டுமல்லாது தோட்டப்பகுதியில் விடமைப்பு திட்டம்,நடுத்தர வர்க்கத்தின் வீடமைப்பு திட்டம்,உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திகள் என பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். என நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப தலைவருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
இன்று அவரது இல்லத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் அமைப்பாளர்கள் சிலரை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
இன்று உங்கள் அனைவருக்கும் தெரியும் நுவரெலியா மாவட்டத்தின் அரசியல் நிலவரம் எவ்வாறு போய் கொண்டிருக்கிறது. என்று, உங்களுக்கு தெரியும் எமது தலைவர் அவர்களின் மறைவின் பின் மக்கள் அதன் இழப்பினை உணர்;ந்து அலை அலையாக இன்று இ.தொ.காவுடன் அணி திரண்டு கொண்டிருக்கிறார்கள்.இம் முறை மொட்ட சின்னத்திற்கு வாக்களிப்பது உறுதியாக இருக்கிறது.மொட்டு சின்னத்தில் எட்டு பேர் போட்டியிடுவதனால் எமது வாக்குகளை பிரித்து கொள்ளாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அதிகமான வேட்பாளர்கள் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு இருக்கும். இது அரசாங்கத்துடன் பேரம் பேசி எங்களுடைய உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பலமான அரசாங்கம் ஒன்று அமையவுள்ளது.மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்திற்காக பொது ஜன பெரமுன களத்தில் இறங்கியுள்ளது.இதில் அசைக்க முடியாத கூட்டணியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருக்கும்.அந்த கூட்டணியில் எங்கள் பிரச்சினைகள் தீர்த்து கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.அத்தோடு பாதை தண்ணீர் மின்சாரம் சுயதொழில் போன்ற கட்டமைப்பு வசதிகளையும் நாம் ஏற்படுத்துவோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
