http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வீட்டில் உருவாக்கும் கவசம் பாதுகாக்குமா?

வீட்டிலிருக்கும் துணிகளை வைத்து தயாரிக்கப்படும் முக கவசங்களுக்கு, கிருமி தடுப்புத் திறன் உள்ளதா என்பதைப் பற்றி அதிக ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அமெரிக்காவிலுள்ள புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக் கழகத்தை சேர்ந்த சித்தார்த் வர்மா ஆய்வகத்தில், ஒரு பொம்மையின் வாய் பகுதியில் குழாய் வைத்து. செயற்கையாக தும்மல் போல நீர்த்திவலைகளை வெளியேறும்படி செய்து. அதற்கு மேலே இரண்டு அடுக்கு துணிகளை வைத்து தடுப்பு போலச் செய்தனர் சித்தார்த்தின் ஆராய்ச்சிக் குழுவினர்.

பீறிட்டு வெளிவரும் நீர்த் திவலைகள் படப்பிடிப்புக் கருவிகளுக்குத் தெரிவதற்கு வண்ண லேசர் ஒளிக் கதிரை பாய்ச்சினர்.மருத்துவர்கள் பயன்படுத்தும் கவசத்திலிருந்து வெளிவரும் தும்மல், 30 செ.மீ துாரம் வரை பயணித்து தரையை நோக்கி சென்றது. வீட்டில் பயன்படுத்தும் கைக்குட்டை துணியை இரண்டு அடுக்காக பயன்படுத்தி செய்யப்பட்ட சுவாசக் கவசத்திலிருந்து வெளியேறிய திவலைகள் வெறும், 6 செ.மீ துாரமே சென்றன. இதனால் கைக்குட்டையால் செய்த கவசம் ஒன்றும் சாதாரணமானதல்ல என்ற முடிவுக்கு வந்தனர் சித்தார்த் குழுவினர்.

இந்த ஆய்வு முடிவுகள், சுவாசக் கவசங்களின் அவசியத்தை மீண்டும் உறுதி செய்வதோடு, சமூக இடைவெளியும், தொற்றிலிருந்து காத்துக் கொள்வதற்கு மிகவும் முக்கியம் என்பதையும் உணர்த்துவதாக சித்தார்த் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *