http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வீட்டில் கோஹ்லிக்கு அளவிடப்பட்ட உணவு

இந்திய கிரிக்கெட்டின் மூன்றுவித அணிகளின் கேப்டன் கோஹ்லி 31. இவரது மனைவி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. கொரோனா ஊரடங்கு காரணமாக போட்டிகள் எதுவும் இல்லாத நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் வீட்டில் தங்கியுள்ளனர்.

இருப்பினும் உடற்தகுதியை சிறப்பாக பராமரிக்கும் கோஹ்லி, தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு ‘பிட்’ ஆக உள்ளார். இதனிடையே கோஹ்லிக்கு வீட்டில் அளவு சாப்பாடு தரப்படுவதாக அனுஷ்கா சர்மா, தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டார்.

அதில், சமையல் அறையில் வைக்கப்பட்ட எடைக் கருவியில் சரியாக 100 கி., அளவுக்கு அவல் உப்புமா அளவிடப்படுகிறது. இதுகுறித்து அனுஷ்கா கூறுகையில்,‘இந்த வீட்டில் கோஹ்லிக்கு அளவிடப்பட்ட உணவு தான்,’ என தெரிவித்து சிரிக்கும் ‘எமோஜி’ மற்றும் இதய லோகோவை பதிவிட்டு இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *