தேயிலை தோட்டங்களை தொழிலாளர்களுக்கு நீண்டகால குத்தகைக்கு பிரித்து கொடுப்போம். நுவரெலியா மாவட்ட பொது பெரமுன வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி.திசாநாயக்க தெரிவிப்பு.
தேயிலை தோட்டங்களில் தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினை இல்லாது செய்வதற்கு தோட்டங்களை ஓரிரு ஏக்கர்களை தோட்டத்தொழிலாளர்களுக்கும்.கிராத்தவர்களுக்கும் பிரித்து கொடுக்கப்போம்.இன்று தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் முன்றில் இரண்டு பெரும்பான்மையினை உற்பத்தி செய்து நிரூபித்திருக்கிறார்கள.; ஆகவே இதனை செய்து கொடுப்பதன் மூலம் தோட்டத்தொழிலாளர்களும் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாறுவார்கள் இதனால் அவர்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கும.இதன் மூலம் வறுமை நிலை ஒழிக்கப்படும்; எனவே எதிர்வரும் காலத்தில் இதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என நுவரெலியா மாவட்ட பொது பெரமுன வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தnpன் பின் நேற்று (08) இரவு நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில்..
ஆயிரம் ரூபா சம்பளத்தினை தோட்டத்தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொவிட் 19 தாக்கம் காரணமாக தற்போது அது பிற்போடப்பட்டுள்ளது எனினும் தேர்தல் முடிந்து ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.அதே நேரம் இன்று தோட்டங்களிலும் கிராமங்களிலும் விவசாயம் செய்வதற்கு நிலம் இன்றி பலர் உள்ளனர். அவர்களுக்கு காடக உள்ள நிலங்களை அரசு மூலம் விவசாயம் செய்வதற்கு பெற்றக்கொடுக்க திட்டம் ஒன்றும் உள்ளது.அதனை நாங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸூடன் இணைந்து எதிர்காலத்தில் செய்வோம்.

அதே நேரம் இன்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த பின் பெரும் எண்ணிக்கையானோர் முன்பைவிட அவர் மீது அன்பும் பாசமும் கொண்டுள்ளார்கள் அதனால் இம்முறை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸிக்கு முன்பை விட ஆதரவு அதிகரித்துள்ளது.அதே நேரம் ஆகவே நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் அதிகபடியான ஆசனங்களால் நிச்சயம் வெற்றி பெறுவோம.; அது மாத்திரமின்று இன்று ஐக்கிய தேசிய கட்சியினை சேர்ந்த பெரும் எண்ணிக்கையானோர். எம்முடன் வந்து இணைந்துள்ளார்கள்.மஸ்கெலியாவில் கூட ஐக்கிய தேசிய கட்சியினை சேர்ந்த பெரும் எண்ணிக்கையோர் எம்முடன் இணைந்து கொண்டுள்ளார்கள்.

ஆகவே இந்த முறை தேர்தலில் நாம் நுவரெலியாவினை வெற்றி கொள்வோம்.நாம் வெற்றி பெற்ற பின் நுவரெலியா வேலையில்லை பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம்.விவாசாய துறையினை விருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். உலக மக்களும் இலங்கை மக்களுமம் நேசிக்கும் இடம் நுவரெலியா ஆகவே நுவரெலியாவில் கொல்ப் விiளாட்டினை விருத்தி செய்து அதன் மூலம் வெளிநாட்டு வருமானத்தினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடும்போம.; அதன் மூலம் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.அதநேரம் இங்கு தொழிற்பயிற்சி நிலையங்களை பல்கலைகழக தரத்திற்கு தரமுயர்த்தி இளைஞர்களை பயிற்று விப்பதன் மூலம் நல்ல தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான சூழல் உருவாகும்.ஆகவே நுவரெலியாவினை முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யும் ஒரு பிரதேசமாக மாற்ற முடியும். அதனை எதிர்வரும் 10 ஆண்டு: காலப்பகுதியில் செய்வோம். இன்று ஐக்கிய தேசிய கட்சி இரணடாக பிளவு பட்டுள்ளது. ஆகவே அதற்கு எவ்வித பலமும் கிடைக்க போவதில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்கு 20 ஆசனங்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு 10 ஆசனங்களும் தான் கூடுமானால் கடைக்கும். ஆகவே இம்முறை அதிகபடிளான ஆசனங்களை அமைக்க போவது நாம் தான் எனவே எதிர்காலத்தில் இந்த நாட்டினை அபிவிருத்தி செய்யக்கூடிய பயனுள்ள திட்டங்களை நாங்கள் உருவாக்குவோம் ஒன்றை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும.; தோட்ட மக்களை பயங்கர வாதிகளுடன் இணையாது காத்த பெருமை தொண்டமானின் பரம்பரையே சாரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
