மத்திய சுற்றாடல் அதிகாரசபை அலுவலக உதவியாளர் மீது இனம் தெரியாதோர் வாள்வெட்டுத் தாக்குதல்
மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வாள்வெட்டுக்கு இலக்கான உத்தியோகஸ்தர் வழமை போன்று இன்றைய தினம் காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் கையில் வாள் வெட்டு காயத்திற்கு இலக்கான உத்தியோகஸ்தர் பாதுகாப்பு தேடி மாவட்ட செயலகத்தினுள் ஓடியுள்ளார்.
இருப்பினும் தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் விடாது துரத்திச்சென்று மாவட்ட செயலகத்தினுள்ளும் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அலுவலரின் கையில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அங்கு நின்ற மக்களால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
