http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆறு மாதகாலப்பகுதியில் 730 மில்லியன் ரூபாவுக்கு வேலை செய்துள்ளார் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் இ.தொ.காவின் நிதிச்செயலாளருமான் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவிப்பு

நாங்கள் அமைச்சுப்பதவிகளை பெற்றவுடன் தொண்டமானின் பெயர்ப்பலகையை மாற்றப்போகவில்லை தோட்டங்கள் தோரும் குறைகூறிக்கொண்டு செல்லவில்லை.கடந்த 6 மாத காலப்பகுதியிலேயே 7300 இலட்சத்துக்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் சேவையாற்றியுள்ளார் என நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் இ.தொ.காவின் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

டிக்கோயா தரவளை பகுதியில் இன்று (08.07.2020) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஒரே எதிர்ப்பார்ப்பு தோட்டங்கள் தோறும் தனிக்கிராமங்கள் வரவேண்டும் என்பதே அதற்காக அவர் ஜனாதியுடன் பேசினார் இந்திய தூதுவருடன் பேசினார்.10000 வீடுகளை தோட்டம் தோரும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.அந்த வீடுகள் இப்போது கட்டுவது போல் 10 வீடுகள் 25 வீடுகள் அல்ல. இந்த தோட்டத்தில் 300 பேர் இருந்தார் 300 பேருக்கும் வீடு வரவேண்டும்.அதை தான் அவர் செய்தார்.ஆறு மாதத்தில் நுவரெலியாவில் பல்கலைக்கழகம் வரவேண்டும் என்றார்.இப்போது அதற்கான அடித்தளங்கள் இட்டு அதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இப்போது சிலர் சொல்கின்றார்களாம் ஆறு மாதத்தில் என்ன செய்தார் என்று.ஓட்டு உரிமையை வாங்கிக்கொடுத்தது சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா சரிசமமாக வாழ உரிமையை பெற்றுக்கொடுத்தது சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இவர்கள் வந்ததும் என்ன செய்தார்கள் பெயர் பலகையைதான் மாற்றினார்கள்.இந்திய அரசாங்கத்துடன் பேசி வாங்கிக்கொடுத்த 4000 வீடுகளைக் கூட இன்னும் கட்டி முடிக்கவில்லை.இவர்கள் கேட்கிறார்களாம் ஆறு மாதத்தில் என்ன செய்தார்கள் என்று.நாங்கள் எதையும் விளம்பரத்துக்காக செய்யவில்லை மக்களுக்காக செய்திருக்கின்றோம்.கடந்த காலங்களில் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றார்கள் ஜீவன் தொண்டமான் வந்தவுடன் அவருக்கு அனுபவமில்லை என்கிறார்கள்.அனுபவம் இல்லாவிட்டால் நுவரெலியா மாவட்டத்தில் தலைவர் பதவி கொடுப்பார்களா? இன்று இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக ஜீவன் தொண்டமானையும் காங்கிரஸையும் பலப்படுத்துவதற்காக அணிஅணியாக திரண்டு வருகிறார்கள்.அதனைப்பார்த்து பயத்தில் சிலர் இப்போது தடுமாறுகிறார்கள் முன்னர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களையும் காங்கிரஸையுமே குறைகூறி அரசியல் செய்தார்கள்.தற்போது அவர் இறந்த பிறகுதான் மக்களுக்கு நல்லதலைவர் வேண்டுமென்ற எண்ணம் உருவாகியுள்ளது.அதனால் தான் மக்கள் செல்வாக்கு உருவாகியுள்ளது.ஜீவன் தொண்டமான் நன்றாக கஷ்டப்பட்டவர் அவரது தந்தையை பிரிந்து பலவருடங்கள் இருந்திருக்கின்றார்.அதனால் தலைவர் தொண்டமான் அவர்கள் தனது குடும்பத்தை கூட பாராமல் மக்களுக்காக சேவையாற்றியுள்ளார்.எனவே உங்களுக்கு ஒரு கடமையும் பொறுப்பும் இருக்கிறது காங்கிரஸை பலப்படுத்தி எங்களை வெற்றி பெற செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *