http://ceylononline.lk/

Ceylon Online News Portal

“இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா? பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டு இளம்பெண் தனது முகநூலில் கேள்வி

இளம்பெண் கடந்த 5ஆம் தேதி தனது மூன்று நண்பர்களுடன் காலி முகத்திடலுக்கு மாலை வேளையில் சென்றுள்ளார்.

இதன்போது மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் தனக்கு முதலில் இடையூறு செய்து, துன்புறுத்தலுக்கு உட்படுத்தவும் முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது இடமொன்றில் இவ்வாறான துன்புறுத்தல்கள் இடம்பெற்ற வேளையில், அதனை தடுத்து நிறுத்த எந்தவொரு நபரும் முன்வரவில்லை என ரஷ்ய இளம்பெண் தெரிவிக்கின்றார்.

 

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் படமொன்றை வெளியிட்ட குறித்த ரஷ்ய யுவதி, இந்த பிரச்சனையை முதலில் ஆரம்பித்தவர் அவர் என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக அவர் தெரிவிக்கின்றார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வருகைத் தருகின்ற போதிலும், குறித்த இளைஞர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாக கூறியுள்ள அவர், அதன் பின்னர் தாம் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கு உதவிகளை வழங்குமாறு ரஷ்ய யுவதி கேட்டுகொண்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து, கொழும்பு கோட்டை போலீசார் நடத்திய சுற்றி வளைப்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 10 திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *