காலி முகத்திடலில் ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு கொடுத்த ஐவருக்கு எதிர்வரும் 10 திகதி வரை விளக்க மறியல்.
காலி முகத்திடலில் ரஷ்ய பெண் ஒருவருக்கு இடையூறு ஏற்படத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர்கள் நேற்று கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது நீதவான் ரங்க திசாநாயக்க எதிர்வரும் 10 திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பெண் தனது இலங்கை காதலனுடன் காலி முகத்திடலில் பேசி கொண்டிருந்த போது குறித்த இடத்திற்கு மது போதையுடன் வந்த ஐவர் அப்பெண்ணிடம் முறைக்கேடான வகையில் நடந்து கொண்டுள்ளதுடன் அப்பெண்ணுக்கு அவரது காதலனுக்கும் இடையூறு விளைவித்துள்ளனர்.
அப்பெண் அப்போது தன்னிடமிருந்த கையடக்க தொலைபேசியில் ஒளி பதிவு செய்து கொண்டு அந்த ஒளி பதிவுடன் கோட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனையடுத்தே குறித்த 5 சந்தேக நபர்கள் கைது செய்து நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 10 திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
