உலகம் முழுவதும் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா
உலகம் முழுவதும் 1 கோடியே 19 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 19 லட்சத்து 41 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 19 லட்சத்து 41 ஆயிரத்து 774 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 743 பேருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 லட்சத்து 92 ஆயிரத்து 954 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 196 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 68 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
