அக்கரபத்தனை பகுதியில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 35 பேர் வைத்தியசாலையில் அனுமதி.
அக்கரபத்தனை பகுதியில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 35 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை ஊட்டுவள்ள பிளேமோர் பிரிவில் தேயிலை மலை இலக்கம் எட்டு மலை இலக்கம் 3 ஆகியவற்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள் மீது குளவிகள் களைந்து சரிமாரியாக தாக்கியுள்ளன.
இந்த குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி பாதிப்புக்குள்ளா 30 பெண் தொழிலாளர்களும் 05 ஆண் தொழிலாளர்களுமே அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி பலர் பல பிரதேசங்களில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து தோட்ட நிர்வாகங்களோ தங்களது தொழிற்சங்கங்களோ எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை. என இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்த உரியவர்கள் கவனத்தில் கொண்டு தங்களுக்கு சரியான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
