http://ceylononline.lk/

Ceylon Online News Portal

குளவி கொட்டுக்கு இலக்காகி 10 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதி.

குளவி கொட்டுக்கு இலக்காகி 10 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று பகல் 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் எபோலிஸ்லி மொண்டிபெயார் தோட்டத்தில் இல 03 தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போதே இவர்கள் குளவிகளின் கொட்டுதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் எட்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குவதா வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *