விடாமுயற்சியுடன் செயப்பட்டு அனைத்து துiறைகளிலும் வெற்றிகாண வேண்டும். உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக பதவி பிரமாணம் செய்து கொண்ட தொழிலாளயின் மகளான செல்வி அ.லோகலட்சுமி தெரிவிப்பு.
தோன்பீல்ட் பிரிவு , அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த அருணாசலம் செல்லம் தம்பதிகளின் புதல்வி செல்வி . அ. லோக லெட்சுமி கடந்த கடந்த வாரம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தினுடைய சட்ட இளமானி பட்டத்தாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது ஆரம்ப நிலை கல்வியை(தரம் 1-5) ம.மா.நு/ தோன்பீல்ட் த.வி இடைநிலை கல்வியை (தரம் 6-11) ம.மா.நு/ஆட்லோ த.வித்தியாலயத்தில் கற்றார் .
இப் பாடசாலையில் கா.பொ.த.சாதரணதர பரீட்சையில் முதல் பெறுபேற்றினை பெற்றதுடன் தனது க.பொ.த (உ/த) கல்வியை ம.மா.நு/ கொட்டகலை த.ம.வி மற்றும் ம.மா.நு/ஹோல்புறூக் பாடசாலைகளில் தொடர்ந்ததுடன் 2013 ஆம் ஆண்டு கலைப்பிரிவில் பயின்று 3(A ) விசேட சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 3 இடத்தினை பெற்றுக்கொண்டதுன் 2015 ஆம் ஆண்டு கொழும்பு சட்டபீடத்துக்கு தெரிவாகியிருந்தார்.

பின் தனது சட்டகற்கையினை 2019 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன் இலங்கை சட்டக்கல்லூரியின் இறுதியாண்டு பரிட்சையிலும் சித்தியடைந்ததை தொடர்ந்து தனது சட்டத்தரணி பதவிக்கான சத்தியப்பிரமாணத்தினை உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் முன்பதாக மேற்கொண்டிருந்தார்.
நுவரெலிய மாவட்டத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர் முழு மலையகத்திற்கும் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளதுடன் தனது இலட்சிய நோக்கினை நிறைவு செய்துள்ளமை குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார். “

எமது மலையகபிரதேசத்திலிருந்து ஒரு சட்டத்தரணியாக நான் உருவாகியமை எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதுடன் பெருமையாகவும் உள்ளது.
காரணம் எமது மலையக சமுதாயத்தினை வளர்ச்சிக்கு என்னுடைய இந்த கல்வி ரீதியான வெற்றியானது பெரும் பங்களித்துள்ளதுள்ளதுடன் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளேன்.
அது மட்டுமல்லாது நான் சட்டத்தரணி என்ற இலட்சித்தினை பெறும் கஷ்டங்களுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் தன்னம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சினாலே அடைந்துள்ளேன் என குறிப்பிடுவது மிகையாகும்.
இது வெறுமனே எனது தனி முயற்சியல்ல இது என்னை சுற்றிய எனது சமுதாயத்தின் கூட்டு முயற்சியாகும்.
அந்தவகையில் அவற்றில் முதலிடம் பெறுவது எனது குடும்ப உறுப்பினர்களே. என்னுடைய வெற்றிக்கு அனைத்து சந்தர்பத்திலும் எனது சகோதரர்கள் உறுதுனையாக ஒரு கற்தூன் போன்றே செயற்பட்டனர்.
இவர்களுடன் நான் கல்வி கற்ற பாடசாலைகளில் எனக்கு கற்பித்த ஆசியர்களின் உன்னதமான கற்றல் சேவையும் ஊக்குவிப்புக்களுடன் கூடிய உதவிகளும் ஆசிர்வாதங்களுமே என்னை இவ்வளவு பெரிய தூரத்திற்கு கொண்டு வந்துள்ளது.
குறிப்பாக அதிபர்களான எஸ்.பிச்சை, தி
ஏ.செல்வம், எம். முத்துஜெயராமன் ஆகியோரும் ஆசியர்களான எஸ்.அருள்ராஜ், .M.H.M ஜவ்பர் மற்றும் திரு. ஜசெக், திருமதி கோகிலவாணி, திருமதி.சாந்த லோஜினி,
ஆர். செபஸ்டியன், திருமதி சிவமலர் , திருமதி நிர்மலா ஆ ஆசிரியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவற்றோடு குறிப்பாக நான் உயர்தர கல்வியை கற்ற தனியார் கற்கை நிலையமான புலமை கல்வியகத்தின் ஆசிரியர்களின் கல்வி பங்களிப்பு என் இலட்சியத்தின் மிக முக்கிய மைல் கல்லாக அமைந்தது.
எனலாம். அவர்களில் குறிப்பாக இப்போது சிரேஷ்ட சட்டத்தரணியான மதிப்பிற்குரிய N.பார்த்தீபன் சட்டத்தரணியினதும் தற்போது யாழ்நீதிமன்றத்தினுடைய நீதாவனாக விளங்கும் மதிப்பிற்குரிய கெளரவ நீதிபதி A.பீட்டர்போல் நீதவான் ஜயா அவர்களும் எப்போதும் முன்னிலையானவர்கள். ஆரம்பகட்ட பாடசாலைக்காலத்தில் நான் ஒரு சிறந்த வைத்தியராக உருவாக வேண்டும் என்ற ஆசை இருந்து. இருப்பினும் சில பல காரணங்களால் அது கைகூடாமல் போய்விட்டது.
இருப்பினும் மனம் தளராது கலைதுறை பாடப்பிரிவை தேர்வு செய்ததுடன் பரீட்சையில் வெற்றியீட்டினேன். பின் நான் ஒரு சிறந்த சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற இலட்சிய உணர்வு உருவானது அப்போது அரசறிவியல் பாட ஆசிரியராகவும் சட்டத்தரணியாகவும் இருந்த கெளரவ நீதவான் திரு A.பீட்டர்போல் ஜயா அர்கள் ஊடாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி திரு.N.பார்த்திபன் அவர்களினூடாகவே. இன்று அவர்களின் ஆசியுடன் ச
ட்டத்தரணியாக உருவாகியுள்ளேன்.
மேலும் எனது பதவி பிராமாணம் செய்த அதே நாளில் நீதவான் திரு A.பீட்டர்போல் ஜயா அவர்களின் வாழ்த்துக்கள் செய்தி கிடைக்கப்பெற்றமை மிக்க இரட்டிப்பு மன மகிழ்ச்சியினையும் பெருமையினையும் அளித்தது. இவர்களோடு சட்டகற்கை நிறைவு பெற்றதன் பின்னரான காலக்கட்டத்தில் எனது தொழில் ரீதியான பயிற்சி நெறி காலகட்டத்தின் போது எனக்கு மிக உறுதுனையாகவும் வழிகாட்டிகளாக இருந்தவர்கள் என்றால் தற்போது இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்வி பிரிவில் பணியாற்றும் மதிப்பிற்குரிய சட்டத்தரணி திரு.க.கபிலன் வில்வராயன் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணியான. திரு.S.ஹெரோசன் குமார் அவர்களும் ஆவார்கள் எனின் அது மிகையாகாது.
அதே தினம் எனது பெற்றோரையும் கெளரவப்படுத்திய பொன் நாள். சாதரண தோட்ட தொழிலாளார்களான என் பெற்றோர்கள் எனக்கு வாழ்வில் அளித்த வரப்பிரசாதம் சிறந்த கல்வியே. எனவே தான் மேற்கூறிய அனைவருக்கும் என்னுடைய வெற்றியில் பங்களிப்பு கொணாட அத்தனை உறவுகளுக்கும் நலன் விரும்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை இத்தெரிவிப்பதில் நான் கடமை பட்டுள்ளேன்.
மேலும் இத்தருணம் சட்டத்தரணி என்ற ஒரு அந்தஸ்தில் நான் என்னுடைய சமுகத்திற்கு வழங்க கூடிய செய்தி யாதெனில் மலையக சமுதாயமானது கட்டாயம் ஏனைய சமுகத்தினை போல சமுக பொருளாதார அரசியல் மற்றும் கலை கல்வி ரீதியாக எதிர்காலத்தில் பாரிய வளர்ச்சியினை கண்டு அசைக்க முடியாத ஒரு உறுதுனையான சமுகமாக நாட்டில் உருவாக வேண்டும் என்பது என்னுடைய ஆசையும் பிரார்தனையும் ஆகும் . இதில் ஒரு சமுகம் கல்வியால் முழுமையான வெற்றிக்காண்பது ஏனைய விடயங்களிலும் பார்க்க மிகப்பெரிய வரப்பிரசாதம்.
எனவே இனிவரும் இளைய சமுதாயத்தினர் அதனை உணர்ந்து பொறுபுபுணர்வுடன் செயற்படுவது மிக அவசியமாகும். அத்தோடு வறுமையை காட்டி இலட்சிய போக்கிலிருந்து தன்னை விலக்கி கொள்வது முட்டாள்தனம். காரணம் வெற்றி தாழ்ந்தவர் உயர்ந்தவர்கள் என்ற பாரபட்சம் இன்றி அனைவருக்கும் சொந்தமாக கூடியது.
அதற்கு உதாரணம் நான். சாதரண நடுத்தர தோட்ட தொழிலாளார்களின் பிள்ளை நான் இன்று ஒரு சட்டத்தரணி. என் அடுத்த தலைமுறையின் முகவரியை மாற்றிக்காட்டிவிட்டேன்.
ஆகவே மலையக சமுதாயத்தினரான நாம் விடாமுயற்சியுடன் செயற்பட்டு அனைத்து துறைகளிலும் வெற்றி காணவேண்டும் . இதற்கு என்னால் முடிந்த முயற்சிகளை இனிவரும் காலங்களில் எடுக்க முயற்சிப்பேன் என்பதுடன் எனது துறையில் நல்லதொரு முயற்சி செய்து தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மிளிரவேணாடும் என்பதே என்னுடைய கனவு” என குறிப்பிட்டிருந்தார்.
