http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மூன்று மாதங்களின் பின் மலையக பாடசாலைகளுக்கு மாணவர்கள் இன்று வருகை தந்தனர்.

நாட்லுள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதனை தொடர்ந்து மலையக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின.
இதன் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்களுக்கு அமைவாக மாணவர்களுகம் ஆசிரியர்களும் வருகை தந்திருந்ததுடன் அவர்கள் உடல் வெப்பம் அளவிடப்பட்டு கைகழுவியதன் பின்னரே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டன.அதனை தொடர்;ந்தே கற்றல் கற்பித்தல் நடவடிக்கைளுக்கும் ஆரம்பிக்கப்பட்டன.
இதே வேளை ஒரு சில பாடசாலைகளுக்கு உடல் வெப்பம் அளவிடும் கருவிகள் கொடுக்கப்படவில்லை என்றும். தெரிவிக்கப்படுகிறது.


சுகாதார நடைமுறைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வலயக்கல்வி பணிமனையினை சுகாதார குழுக்கள் ஆகியன சென்று பாடசாலையின் சுகாதார நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
கொவிட் 19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சகல பாடசாலைகளும் இன்று (06) திகதி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி 12 மூன்றாம் திகதி இலங்கையின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டன.
இவ்வாறு மூடப்பட்ட பாடசாலைகள் கடந்த ஜூன் 29 திகதி திறக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒரு வாரகாலமாக பாடசாலைகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டதனை, தொடர்ந்து இன்று மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
இன்றைய தினம் க.பொ.த உயரதரம்,க.பொ.த.சாதாரணதரம் மற்று தரம் ஐந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மாத்திரம் ஆரம்பிக்கப்படுகின்றன.
அதனை தொடர்ந்து கட்டம் கட்டமாக ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *