http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வெள்ளவத்தை பகுதியிலுள்ள புடவை நிலையமொன்றில் இடம்பெற்ற தீ பரவல்

வெள்ளவத்தை, புடவை வர்த்தக நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக, காலி வீதியில் கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதி, ராமகிருஷ்ண மிஷன் சந்தியுடன் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்து, சற்றுமுன்ன ர்(05.07.2020) இடம்பெற்றுள்ளது. காலி வீதி, வெள்ளவத்தை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட டபில்யூ. ஏ. சில்வா மாவத்தை சந்தியிலுள்ள புடவை வர்த்தக நிலையமொன்றிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவைரையில் கண்டறியப்படாத நிலையில், தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *