சிறைச்சாலை சுற்றிவளைப்பில் 1102 செல்லிடப்பேசிகள் மீட்பு
கடந்த நான்கு வார காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது கைதிகளிடமிருந்து 1102 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிiறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளன.
இச்சுற்றி வளைப்பு கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலை,மெகசின் சிறைச்சாலை,வெலிக்கடை,புஸ்ஸ,தும்பர, நீர் கொழும்பு காலி உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த தொலை பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது 277 செல்லிடப்பேசிகள் 688 சிம்காட்கள் 1310 செல்லிடப்பேசி பட்டரிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதே வேளை பல்லெகெலே,தும்பர உள்ளிட்ட சில சிறைச்சாலைகளிலிருந்து 9999 பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
