இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதற்கான ஆதாரமில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை
2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதற்கான ஆதாரமில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கடந்த 30 ஆம் திகதியன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இது தொடர்பாக முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார மற்றும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க, அப்போதைய இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா உள்ளிட்டோர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 2011 உலகிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதற்கான ஆதாரமில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.
