ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்
கொரோனா எனும் கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குறித்த 261 பேரும் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் ஊடாக ஜப்பானின் தலைநகர் டோக்கியோவின் நரிடா விமான நிலையத்தில் இருந்து அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வருகை தந்துள்ள 261 பேருக்கும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
