அரசு பதில்வழங்கத் தேவையில்லை பதில் சொல்ல வேண்டியவர்கள் மாவையும் கூட்டமைப்புமே – காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிப்பு
காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி இராணுவத் தளபதியோ அரசோ பதில் கூறவேண்டிய தேவையில்லை, பதில் சொல்ல வேண்டியவர்கள் மாவையும் கூட்டமைப்புமே என்று வவுனியா மாவட்டத்தில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,
தேர்தல் நெருங்கி வருவதால் மாவை தனது வேஷத்தை மாற்றுகிறார். இலங்கை இராணுவமோ அல்லது ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கமோ இனப் போரின்போதும் அதற்குப் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி ஆராயாது. இதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்கும், சக்தி வாய்ந்த சர்வதேச நாடுகளுக்கும், தமிழர்களுக்கும் மற்றும் மனிதநேய ஸ்தாபனங்களுக்கும் ஸ்ரீலங்கா சிங்கள தலைவர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள்.