http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் வெற்றியை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டுவோம் -நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பி.சக்திவேல்

நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிபெறும் 8 வேட்பாளர்களில் அதிக விருப்பு வாக்குகளை ஜீவன் தொண்டமானே பெறுவார் என இ.தொ.கா உபதலைவரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்ன நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் வெற்றியை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டுவோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பலத்தை நிரூபிப்போம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு பின்னர் ஆறுமுகன் தொண்டமானை கொண்டுவந்தமோ அதேபோல ஜீவன் தொண்டமானையும் கொண்டு வருவோம்.என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *