ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில், அதிகரித்த மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலங்களில் மின் கட்டணம் அதிகரித்த மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது. குறித்த நிவாரணத்தை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் கலந்து ஆலோசிப்பதற்காக இன்று (02) குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
