http://ceylononline.lk/

Ceylon Online News Portal

எதிர்வரும் 05 ஆண்டுகள் காலப்பகுதியில் 32 அம்ச கோரி;கைகளின் அடிப்படையிலேயே இ.தொ.கா.செயப்படும். நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுபெரமுன வேட்பாயர் கணபதி கணகராஜ் தெரிவிப்பு.(வீடியோ இணைப்பு)

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீ லங்கா பொது பெரமுன கட்சியுடன் 32 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே கௌரவ மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆதரவு வழங்கினார். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளார்கள.; அதில் முதலாவது கோரிக்கையாக காணப்படுவது மலையகத்திற்கான பல்கலைக்கழகம் இப்போது அது ஐம்பது சதவீதம் நிறைவுபெற்றுள்ளது.இந்த 32 அம்ச கோரிக்கை நிறைவேற்றினாலே மலையக மக்கள் இன்னொரு மாற்றத்திற்கு கொண்டுவரப்படுவார்கள.; என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பிரசார செயலாளரும் நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா பொது பெரமுன் வேட்பாளருமான கணபதி கணகராஜ் ;தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று (02) திகதி நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்;கையில்…
பலர் இன்று 80 வருட அரசியல் வாழ்ககையில் ஒன்று செய்யவில்லை என்று தெரிவித்து வருகிறார்கள.; ஆனால் மலையக மக்களை அடிமை வாழ்க்கையிலிருந்து தேசிய நீரோட்டத்திற்கு கொண்டு வரும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உழைப்பு திட்டங்கள் தான் காரணமாக இருக்கின்றன.மலையக மக்கள் பின் தங்கியிருக்கிறார்கள் என்று சொல்பவர்கள் வெறுமனே அரசியல் நோக்கத்திற்காக

சொல்லலாம்.இன்று அவர்கள் பேசுவது கூட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திட்டத்தினூடாக வெளிவந்தவர்கள் தான்.
இதே நேரம் நுவரெலியா மாவட்டத்தில் பொது பெரமுன கட்சியில் 08 தமிழ் வேட்பாளர்களும் 03 சிங்கள வேட்பாளர்களும் போட்டியிருஷடுகிறார்கள்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸஸை பொறுத்தவரையில் இரண்டாக பீரிந்து நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் களத்தினை சந்தித்து கொண்டிருக்கிறது.இன்று பலர் தேர்தல் களத்திலே வந்திருந்த போதிலும் அவர்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து குறைப்பதற்காக பெரும்பானமையினரால் ஏவி விடப்பட்ட ஏஜன்ட்களாகவே களமிரங்கியிருக்கிறார்கள்.அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறையுமே தவிர கூட்ட முடியாது.ஆகவே வாக்கு பிரிப்பாளர்களுக்கும் ஏஜன்ட்டுக்களுக்கும் வாக்களிக்காமல் வெல்லக் கூடியவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.அதே நேரம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் நான் ஏற்கனவே கூறியது போல அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் 32 கோரிக்கைகளை முன் வைத்தார.; அதில் ஆராய்ந்து பார்த்தால் விரிவான பல விடயங்கள் அதில் கூறப்பட்டுள்ளன. அதில் கல்வி சம்பந்தமான முன்மொழிவுகள் மலையக மக்களின் பொருளாதாரம்,வாழ்வாதாரம் சுயதொழில்வாய்ப்பு, Nலைவாய்ப்பு காணி தோட்டங்களில் இருக்கின்ற காணிகளை சுயதொழிலுக்காக பிரித்து கொடுப்பது.ஆக்ரோ சிஸ்ட்டம் என்ற முறையிலே தேயிலை தோட்டங்களை மாற்றியமைப்பது.விளையாட்டுத்துறை ,வைத்தியதுறை போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பறந்து அடிப்படையில் இருப்பதனால் அதன் அடிப்படையில் செயப்படுவதுதான் எமது நோக்கம். என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *