http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இரு புகையிரதங்கள் இருவேறு இடங்களில் தடம்புரள்வு மலையகத்துக்கான புகையிரதசேவைகள் பாதிப்பு (வீடியோ இணைப்பு)

நாவலப்பிட்டி பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி புறப்பட்ட சரக்கு புகையிரதம் ஒன்று அட்டன் புகையிரதநிலையத்துக்கு சுமார் 100 மீற்றர் சமீபமாக இன்று (01.07.2020) மாலை 4.00 மணியளவில் தடம்புரள்வுக்கு உள்ளானதில் மலையகத்துக்கான ரயில்சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.


பதுளையிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம் அம்பேவலவிற்கும் பட்டிப்பொலவிற்கும் இடையில் இன்று காலை 11.25 மணியளவில் தடம்புரள்வுக்கு உள்ளானது. இதனால் புகையிரத பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.


இதேவேளை கொழும்பு பதுளை பிரதான புகையிரதப்பாதையில் இன்றைய தினம் இரு இடங்களில் புகையிரதங்கள் தடம்புரண்டதன் காரணமாக பதுளைக்கான இரவு நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது மலையகத்தில் பெய்துவரும் மழைகாரணமாக புகையிரத வீதியில் ஒருசில இடங்களில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் குறித்தபகுதியில் புகையிரதங்கள் தடம்புரள்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *