http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட கல்திட்டை ஆய்வு

மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்திட்டை ஆய்வு செய்யப்பட்டது.மடத்துக்குளம் அருகே, கிழக்கு நீலம்பூர் விளை நிலம் உள்ள பகுதியில் மிகப்பழமையான கல்திட்டை உள்ளது. இது குறித்து, தினமலரில் செய்தி வெளியானது. இதையடுத்து, உடுமலை ஜிவிஜி கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் கற்பகவல்லி, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்ந்த செல்வராஜ், வளவன், அருள் செல்வன், ராபின் ஆகியோர் இதை ஆய்வு செய்தனர்இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பெருங்கற்கால பண்பாட்டில் இறந்தவர்கள் நினைவாக கல்திட்டை அமைப்பது வழக்கம்.

சங்ககாலத்திற்கு முன்பே, பாலக்காட்டு கணவாய் பகுதியில் நீர் வழித்தடத்தில் வர்த்தகம் நடந்துள்ளது.இதில் ஈடுபடும் வணிகர்கள், தரை வழியில் கிழக்கு திசை நோக்கி பயணிக்க வடபூதி நத்தம், கண்ணாடிப்புத்துார், ஐவர்மலை, சின்ன கலையம்புத்துார் வழியாக பாதை இருந்துள்ளது. இந்த வழித்தடத்தில் பயணித்த வணிகர்கள் அல்லது இனக்குழுக்களை சார்ந்தவர்கள் போர் காரணமாகவோ அல்லது இதர தாக்குதல் காரணமாகவோ இந்த இடத்தில் இறந்திருக்கலாம். அவர்கள் நினைவாக இந்த கல்திட்டை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தடி உயரம், மூன்று அடி அகலமுள்ள பலகை வடிவ கற்களை பயன்படுத்தி, சதுர வடிவில் அறை போன்ற கட்டமைப்பு உருவாக்கியுள்ளனர். இதே அளவுள்ள கற்களை மேற்கூரையாக அமைத்துள்ளனர். இதுஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது.இவ்வாறு, கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *